நிலுவையில் உள்ள பணிகளை விரைந்து முடிக்க ஆட்சியரிடம் எம்எல்ஏ கோரிக்கை

நிலுவையில் உள்ள பணிகளை விரைந்து முடிக்க ஆட்சியரிடம் எம்எல்ஏ கோரிக்கை

பணிகள் குறித்து ஆலோசனை 

திருச்செங்கோடு சட்டமன்ற தொகுதிகளில் நிலுவையில் உள்ள பணிகளை விரைந்து முடிப்பது குறித்தும், வளர்ச்சி பணிகள் குறித்தும் மாவட்ட ஆட்சியரிடம் எம்.எல்.ஏ ஈஸ்வரன் ஆலோசனை மேற்கொண்டார்.
நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திருச்செங்கோடு சட்டமன்ற தொகுதியில் நிலுவையில் உள்ள பல பணிகளை விரைந்து முடிப்பது சம்பந்தமாகவும், திருச்செங்கோடு தொகுதி வளர்ச்சி சம்பந்தமாகவும் மாவட்ட ஆட்சியர் மருத்துவர் உமாவுடன் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் பொதுச்செயலாளரும் திருச்செங்கோடு சட்டமன்ற உறுப்பினருமான ஈ.ஆர்.ஈஸ்வரன் எம்எல்ஏ ஆலோசனை மேற்கொண்டார். அப்போது கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சியின் நாமக்கல் மேற்கு மாவட்ட செயலாளர் நதி ராஜவேல் மற்றும் நாமக்கல் மாவட்ட திட்ட இயக்குனர் உள்ளிட்ட அதிகாரிகள் இருந்தனர்.

Tags

Next Story