சாலை விபத்தில் காயமடைந்த நபரை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த எம் எல் ஏ

சாலை விபத்தில் காயமடைந்த நபரை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த எம் எல் ஏ

சாலை விபத்தில் காயமடைந்த நபரை மருத்துவமனை அனுப்பி வைத்த எம்எல்ஏ

பாப்பாரப்பட்டி அருகே சாலை விபத்து ஏற்பட்ட நபருக்கு முதல் உதவி செய்து மருத்துவமனைக்கு பென்னாகரம் சட்டமன்ற உறுப்பினர் அனுப்பி வைத்தார்,
தர்மபுரி மாவட்டம், பென்னாகரம் சட்டமன்ற தொகுதி பாப்பாரப்பட்டி அடுத்துள்ள ஓ.ஜி.அள்ளி பேருந்து நிறுத்தம் அருகில் பென்னாகரம் சட்டமன்ற தொகுதியின் உறுப்பினரும் பாட்டாளி மக்கள் கட்சியின் கௌரவ தலைவருமான ஜிகே மணி அவர்கள் தனது வாகனத்தில் சென்று கொண்டிருந்த போது அப்பகுதியில் விபத்து ஏற்பட்டு காயமடைந்த நபரைக் கண்டு உடனடியாக அவருக்கு முதலுதவி சிகிச்சை செய்யப்பட்டது. 108 ஆம்புலன்ஸ் வரவழைத்து அடிபட்டவரை ஆம்புலன்சில் ஏற்றி அனுப்பி தர்மபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து மருத்துவரிடம் தொலைபேசியில் பேசி சிகிச்சை அளிக்க ஏற்பாடுகளை செய்தார் இதனால் அப்பகுதி மக்கள் சட்டமன்ற உறுப்பினருக்கு தங்களது நன்றிகளை தெரிவித்தனர்.

Tags

Read MoreRead Less
Next Story