கட்சி நிர்வாகி குழந்தைக்கு பெயர் சூட்டிய எம்எல்ஏ.,

கோவக்குளத்தில் திமுக., கட்சி நிர்வாகி குழந்தைக்கு பெயர் சூட்டினார் எம்எல்ஏ., சிவகாமசுந்தரி.
திமுக கட்சி நிர்வாகி குழந்தைக்கு "கவிநிதி" என பெயர் சூட்டிய எம்எல்ஏ. கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் தாலுகாவிற்கு உட்பட்ட, கோவக்குளம் பகுதியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்க வந்தார் எம்எல்ஏ சிவகாமசுந்தரி. அப்போது, கோவக்குளம் பேரூராட்சி 13வது வார்டு பகுதியில் வசித்து வரும் திமுக கட்சி பிரதிநிதி மற்றும் தொழில்நுட்ப அணியின் பொறுப்பாளர் கருப்பசாமி மற்றும் அவரது மனைவி நித்தியா இவரது பெண் குழந்தைக்கு பெயர் சூட்டுமாறு எம்எல்ஏவிடம் கோரிக்கை விடுத்தனர். அவர்களது கோரிக்கையை ஏற்று குழந்தையை கையில் வாங்கி அந்த குழந்தைக்கு "கவிநிதி" என பெயரிட்டு, மூன்று முறை அந்த பெண் குழந்தையின் காதில் குழந்தையின் பெயரை உச்சரித்து பின்னர் பெற்றோரிடம் வழங்கினார். மேலும், அந்த குழந்தைக்கு முதல் முதலாக ரூபாய் 500 கொடுத்து வாழ்த்தும் தெரிவித்தார் எம்எல்ஏ சிவகாமசுந்தரி. தங்களது குழந்தைக்கு பெயர் சூட்டிய எம்எல்ஏவுக்கு நன்றி தெரிவித்தனர் கருப்பசாமி- நித்யா தம்பதிகள்.

Tags

Next Story