மதுபழக்கத்தை கைவிடுமாறு கண்டித்த தாய் - மகன் விஷமருந்தி தற்கொலை
பைல் படம்
திருச்சி மாவட்டம் முசிறி அருகே அத்தலைப்பட்டியைச் சேர்ந்தவர் ராஜகோபால். இவரது மகன் 27 வயதான தினேஷ்குமார். இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. இவர் கொத்தனாராக வேலை செய்து வந்துள்ளார். மேலும் இவருக்கு மது பழக்கத்திற்கு அடிமையானதாக கூறப்படுகிறது. மதுப்பழக்கத்தை கைவிடுமாறு இவரது தாய் கண்டித்துள்ளார். இதனால் மணமடைந்த தினேஷ்குமார் கடந்த 15ம் தேதி விஷம் குடித்து மயங்கிக் கிடந்தார்.
இதை கண்ட அவரது குடும்பத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக முசிறியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு பின்னர் மேல் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு தொடர் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து அவரது தாய் முசிறி காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.