சுசீந்திரம் அருகே எலுமிச்சை வியாபாரி மர்ம மரணம்

சுசீந்திரம் அருகே எலுமிச்சை வியாபாரி மர்ம மரணம்
பைல் படம்
சுசீந்திரம் அருகே எலுமிச்சை வியாபாரி மர்மமான முறையில் உயிரிழந்தது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
கன்னியாகுமரி மாவட்டம் மேல கிருஷ்ணன் புதூர் அருகே மதுரை விராட்டி பத்து கிராமம், முத்து தேவர் காலனி சேர்ந்த அன்பானந்தம் மகன் சரவணன் (53) என்பவர் வசித்து வருகிறார். இவர் அந்த பகுதியில் தங்கி எலுமிச்சம் பழம் வியாபாரம் செய்து வந்தார். இவரது மனைவி சிவகாசி பகுதியை சேர்ந்த கண்ணம்மா. இவரும் அதே ஊரில் தங்கி வீட்டு வேலைகள் செய்து வருகிறார். இவர்கள் இருவருக்கும் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். இந்த நிலையில் சம்பவ தினம் காலையில் கண்ணம்மா தங்கி இருக்கும் வீட்டின் முன் பகுதியில் சரவணன் வாந்தி எடுத்த நிலையில் இறந்து கிடந்துள்ளார். இது குறித்து கண்ணம்மா சுசீந்திரம் போலீசில் புகார் தெரிவித்தார். புகாரின் பேரில் சுசீந்திரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags

Read MoreRead Less
Next Story