உண்ணாவிரத போராட்டம் நடத்திய நாதஸ்வரக் கலைஞர்

உண்ணாவிரத போராட்டம் நடத்திய நாதஸ்வரக் கலைஞர்

 திண்டுக்கல் கலெக்டர் அலுவலகம் முன்பு குடும்பத்துடன் உண்ணாவிரத போராட்ட நடத்திய நாதஸ்வரக் கலைஞரால் பரபரப்பு ஏற்பட்டது.

திண்டுக்கல் கலெக்டர் அலுவலகம் முன்பு குடும்பத்துடன் உண்ணாவிரத போராட்ட நடத்திய நாதஸ்வரக் கலைஞரால் பரபரப்பு ஏற்பட்டது.

திண்டுக்கல் மாவட்டம் எரியோடு அருகே உள்ள கெச்சாணி பட்டியைச் சேர்ந்த சரவணன் கலெக்டர் அலுவலகம் முன்பு உண்ணாவிரதப் போராட்டம் நடத்தினர். அப்போது அங்கு பாதுகாப்பு பணிந்த போலீசார் இதுகுறித்து விசாரணை செய்து மனு கொடுங்கள் நடவடிக்கை எடுக்கப்படும் எனக் கூறி அவர்களை கலைந்து போகச் செய்தனர்.

இதுகுறித்து சரவணன் தெரிவித்ததாவது: நான் நாதஸ்வர கலைஞராக பணி செய்து வருகிறேன்.திண்டுக்கல்லில் உள்ள தனியார் ஹோம் பைனான்ஸ் நிறுவனத்தில் இந்த ஆண்டு பிப்ரவரி மாதம் வீடு கட்டுவதற்காக ரூ.13 லட்சம் கடன் பெறுவதற்கு விண்ணப்பித்தோம். அதற்கு அந்த நிறுவனம் ரூ. 2 லட்சத்து 11 ஆயிரம் மட்டும் கொடுத்தனர்.

கடந்த நான்கு மாதங்களாக மீதி பணம் வழங்கவில்லை. நான் ரூ.13 லட்சத்திற்கான வட்டியை கடந்த நான்கு மாதமாக கட்டி வருகிறோம். கடன் தொகை எங்களுக்கு முழுமையாக கிடைக்கவில்லை. இதனால் மன வேதனை இருந்த நாங்கள் கலெக்டர் அலுவலகத்தில் உண்ணாவிரத போராட்டம் இருக்க முயன்றோம் என தெரிவித்தார்.

Tags

Next Story