தேசிய அறிவியல் தின விழா

தேசிய அறிவியல் தின விழா

தேசிய அறிவியல் தின விழா

சிவகங்கை மாவட்டம், இளையான்குடி, டாக்டர் சாகிர் உசேன் கல்லூரி அறிவியல் கழகம் சார்பாக தேசிய அறிவியல் தினத்தை முன்னிட்டு "நானோ அறிவோம்" என்னும் தலைப்பில் கருத்தரங்கம் நடைபெற்றது. கல்லூரி துணை முதல்வர் ஜஹாங்கிர் வரவேற்றார். கல்லூரி முதல்வர் ஜபருல்லாகான் தலைமையுரையாற்றினார். இயற்பியல் துறை தலைவர் முஸ்தாக் அஹமது கான் வாழ்த்துரை வழங்கினார். கல்லூரி அறிவியல் கழக ஒருங்கிணைப்பாளர் ரோஷன் ஆராபேகம் சிறப்பு விருந்தினரை அறிமுகம் செய்தார். சிறப்பு விருந்தினராக காரைக்குடி, அழகப்பா அரசு கலை கல்லூரி, இயற்பியல் துறை இணைப் பேராசிரியர் கருணாகரன் கலந்துகொண்டு நவீன நானோ தொழில்நுட்ப வளர்ச்சிகள் குறித்து பேசினார். அறிவியல் கழக இணை ஒருங்கிணைப்பாளர் காஜா முஹைதீன் நன்றி கூறினார்.

Tags

Read MoreRead Less
Next Story