தேசிய அறிவியல் தின விழா

தேசிய அறிவியல் தின விழா

தேசிய அறிவியல் தின விழா

கள்ளக்குறிச்சி அரசு கல்லுாரியில் தேசிய அறிவியல் தின விழா நடைபெற்றது.
கள்ளக்குறிச்சி அரசு கல்லுாரியில் தேசிய அறிவியல் தின விழா நடந்தது. கல்லுாரி முதல்வர் முனியன் தலைமை தாங்கினார். கணினி அறிவியல் துறை தலைவர் சங்கர் வரவேற்றார். வேளாண்மை இணை இயக்குனர் சங்கர் பங்கேற்று விவசாய திட்டங்கள் மற்றும் விவசாயத்தின் முக்கியத்துவம் குறித்து விளக்கினார். கல்லுாரி நுாலகர் அசோக்குமார், கல்லுாரி துறை தலைவர்கள் தர்மராஜா, முருகானந்தன், பேராசிரியர்கள் சித்ரா, மோகனா, விஜயகுமார், சபிதா, உடற்கல்வி இயக்குனர் சரவணன் உட்பட பலர் பங்கேற்றனர். கல்லுாரி மாணவர்களின் அறிவியல் சார்ந்த விழிப்புணர்வு கண்காட்சி இடம் பெற்றது. துறை தலைவர் உமா நன்றி கூறினார்.

Tags

Read MoreRead Less
Next Story