தெருநாய்களுக்கு கருத்தடை அறுவை சிகிச்சை

தெருநாய்களுக்கு கருத்தடை அறுவை சிகிச்சை

பழநியில் ஆங்காங்கே ரோட்டில் சுற்றித்திரியும் 1,500 தெருநாய்களுக்கு நகராட்சி சார்பில் கருத்தடை அறுவை சிகிச்சை மற்றும் தடுப்பூசி செலுத்தப்படுகிறது.

பழநியில் ஆங்காங்கே ரோட்டில் சுற்றித்திரியும் 1,500 தெருநாய்களுக்கு நகராட்சி சார்பில் கருத்தடை அறுவை சிகிச்சை மற்றும் தடுப்பூசி செலுத்தப்படுகிறது.
பழநியில் 1500 தெருநாய்களுக்கு நகராட்சி சார்பில் கருத்தடை அறுவை சிகிச்சை மற்றும் தடுப்பூசி செலுத்தப்பட உள்ளது. பழநி நகரில் 33 வார்டுகள் உள்ளன. இங்கு கூட்டமாக சுற்றித்திரியும் தெருநாய்களால் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகி உள்ளனர். பெண்கள், குழந்தைகள் வெளியில் நடமாட முடியாத சூழல் ஏற்பட்டது. குழந்தைகளை விரட்டி விரட்டி கடித்து வந்தன. எனவே, தெருநாய்கள் தொல்லையை கட்டுப்படுத்த வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர்.இதன் காரணமாக நகராட்சி சார்பில் தெருநாய்களை பிடித்து இனப்பெருக்க தடை அறுவை சிகிச்சை மற்றும் ராபீஸ் நோய் தடுப்பூசி போடும் பணியும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

Tags

Next Story