T.gode (Mallasamudram) King 24x7 |17 Oct 2024 10:18 AM GMT
கொன்னையார் கிராமத்தில், பேரிடர்காலத்தில் ஆற்றுவெள்ளப்பெருக்கில் சிக்கிகொண்டவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டுவரும் இளைஞர்களுக்கு ஊராட்சி மன்றம் சார்பில் கவுரவிக்கப்பட்டது.
எலச்சிபாளையம் அருகேயுள்ள, கொன்னையார் கிராமத்தில் பலவருடங்களாக செல்லும் திருமணிமுத்தாறு வாய்க்காலில் அவ்வப்போது வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு சிறுசிறு விபத்துகள் ஏற்பட்ட வண்ணம் உள்ளன. இந்நிலையில், அக்கிராமத்தை சேர்ந்த இளைஞர்கள் தாமாக முன்வந்து பேரிடர் காலத்தில் விபத்தில் சிக்கிக்கொண்டவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இவர்களின் சமூக பணிகளை ஊக்குவிக்கும் வகையில் கொன்னையார் ஊராட்சிமன்ற அலுவலகத்தில் ஊராட்சிமன்ற தலைவர் நடராஜன் தலைமையில், பி.டி.ஓ.,லோகமணிகண்டன் முன்னிலையில் நேற்று, ஆனந்த், தினேஷ், வைரமுத்து, மாதவராஜ், கார்த்திக், சாமிதுரை, மனோகரன், ரவி உள்ளிட்ட இளைஞர்களுக்கு சால்வை அணிவிக்கப்பட்டு கவுரவிக்கப்பட்டது. வார்டு உறுப்பினர்கள் சதாசிவம், சரவணன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
Next Story