மல்லசமுத்திரத்தில் மேல்முகம் ஊராட்சியை மல்லசமுத்திரம் இரண்டாம்நிலை நகராட்சியுடன் இணைக்கும் திட்டத்தை கைவிடக்கோரி பொதுமக்கள் பி.டி.ஓ.,அலுவலகம் முன்பாக, கவனஈர்ப்பு ஆர்பாட்டம் நடத்தினர்.
மல்லசமுத்திரம் வட்டாரத்திற்குட்பட்ட, மேல்முகம் ஊராட்சியினை மல்லசமுத்திரம் இரண்டாம்நிலை நகராட்சியுடன் இணைத்திட அரசு கருத்துகேட்டு கடிதம் அனுப்பியுள்ளது. அவ்வாறு நகராட்சியுடன் இணைக்கப்பட்டால் 100 நாள் வேலை வாய்ப்பு திட்டம், வீட்டு வரி உயர்வு, தண்ணீர் வரி உயர்வு என பல்வேறு சிக்கல்களை பொதுமக்கள் சந்திக்க வேண்டி உள்ளது. எனவே, இத்திட்டத்தை அரசு நிரந்தரமாக கைவிட வேண்டும் என வலியுறுத்தி நேற்று, மல்லசமுத்திரம் பி.டி.ஓ., அலுவலகம் முன்பாக அப்பகுதியை சேர்ந்த 350க்கும் மேற்பட்ட பொதுமக்கள் திரண்டு கவன ஈர்ப்பு ஆர்பாட்டம் நடத்தினர். மேல்முகம் ஊராட்சிமன்ற துணைத்தலைவர் குமரேசன், தன்னாட்சி அமைப்பு உறுப்பினர் நந்தகுமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Next Story