T.gode (Mallasamudram) King 24x7 |27 Oct 2024 9:32 AM GMT
மரப்பரை கிராமத்தில், ஒருங்கிணைந்த பண்ணைய திட்டத்தில் விவசாயிகளுக்கு வீரியஒட்டு ஆமணக்கு பயிர்முறை முதல்நிலை செயல்விளக்கத்திடல் வயல்விழா நடந்தது.
மல்லசமுத்திரம் அருகேயுள்ள, மரப்பரை கிராமத்தில் நேற்று, கோயமுத்தூர் தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம் சார்பாக, ஏத்தாப்பூர் மரவள்ளி மற்றும் ஆமணக்கு ஆராய்ச்சி நிலையத்தில் இயங்கி வரும் அகில இந்திய ஒருங்கிணைந்த பண்ணைய ஆராய்ச்சி திட்டத்தில், ஒருங்கிணைந்த பண்ணையத் திட்டம் மூலம் வீரிய ஒட்டு ஆமணக்கு பயிர் முறை முதல்நிலை செயல் விளக்கத்திடல் வயல் விழா நடந்தது. இதில், ஏத்தாப்பூர் மரவள்ளி மற்றும் ஆமணக்கு ஆராய்ச்சிநிலைய ஒருங்கிணைந்த பண்ணையதிட்ட திட்ட விஞ்ஞானி இணைப்பேராசிரியர் முனைவர்.நடராஜன் கலந்துகொண்டு வரவேற்புரையாற்றினார். ஏத்தாப்பூர் ஆமணக்கு ஆராய்ச்சிநிலைய பேராசிரியர் மற்றும் தலைவர் வெங்கடாசலம் திட்டவிளக்கவுரையாற்றினார். உத்திரபிரதேச மாநிலம், மோதிபுரம் அகிலஇந்திய ஒருங்கிணைந்த பண்ணையதிட்ட திட்ட ஒருங்கிணைப்பாளர் முனைவர்.ரவிசங்கர் தலைமையுரையாற்றினார். மல்லசமுத்திரம் வேளாண்மை அலுவலர் சிரஞ்சீவி வேளாண்துறையின் மூலம் செயல்படுத்தப்படும் திட்டங்கள் குறித்து பேசினார். ஏத்தாப்பூர் வேளாண்உதவி அலுவலர் நல்லதம்பி நன்றியுரையாற்றினார். வேளாண்மை உதவி அலுவலர்கள் முருகன், ஜெயசங்கர், சரத்குமார், மோகன், மணி ஆகியோர் இவ்விழாவிற்கான ஏற்பாடுகளை செய்திருந்தனர். 30க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்துகொண்டு ஆலோசனைகள் பெற்று பயனடைந்தனர். விவசாயிகளுக்கு சிற்றுண்டி மற்றும் மதியஉணவு வழங்கப்பட்டது.
Next Story