டெங்கு

X
ஈரோடு மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதியில், சமீபத்தில் 4 பேருக்கு டெங்கு பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டு, ஈரோடு அரசு தலைமை மருத்துவமனையில் அவர்களுக்கு உரிய சிகிச்சை அளிக்கப்பட்டது. இதை அடுத்து அவர்கள் குணமாகினர தொடர்ந்து, ஈரோடு மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் டெங்கு தடுப்பு பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வரப்படுகிறது. தாழ்வான பகுதிகளில் தேங்கியுள்ள நீர் அகற்றப்பட்டு, புகை மருந்து அடித்தும், மருந்து தெளித்தும் வரப்படுகிறது. இப்பணிகளில் மாநகராட்சி டெங்கு கொசு ஒழிப்பு பணியாளர்கள் 300 -க்கும் மேற்பட்டோர் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், ஈரோடு மாநகராட்சி 1 -வது வார்டுக்கு உட்பட்ட கே.ஆர்.பி நகர் பகுதியில் 50 வயது பெண் ஒருவருக்கு உடல் நலம் பாதிக்கப்பட்ட நிலையில், ஈரோடு அரசு தலைமை மருத்துவமனையில் பரிசோதனை செய்யப்பட்டது. அதில், அவருக்கு டெங்கு பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதை அடுத்து பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு உரிய சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் அந்தப் பெண்ணின் வீடு மற்றும் அப்பகுதியில் உள்ள குடியிருப்புகள், சாக்கடை கால்வாய்களை மாநகர நல அலுவலர் கார்த்திகேயன் நேரில் பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டார். அப்போது, சாக்கடை கால்வாய்களை தூர்வாருதல், புகை மருந்து அடித்தல், மருந்து தெளித்தல் உள்ளிட்ட பணிகளை துரிதப்படுத்த வேண்டும் என சுகாதார அலுவலர்கள், சுகாதார ஆய்வாளர்கள், தூய்மை பணியாளர்கள், கொசு ஒழிப்பு பணியாளர்களுக்கு, மாநகர நல அலுவலர் கார்த்திகேயன் அறிவுறுத்தினார்.
Next Story

