X
சேலம் மண்டலத்தில் ரயில் சேவையை பயன்படுத்துவோர் எண்ணிக்கை படிப்படியாக வளர்ந்து வருகிறது. இந்த ஆண்டில் ரயில் கட்டண உயர்த்தியது இது இரண்டாவது முறையாகும்.
நாடு முழுவதும் டிசம்பர் 26-ம் தேதி முதல் ரெயில் கட்டணம் கி.மீ.க்கு 1 முதல் 2 பைசா வரை உயர்ந்துள்ளது.புறநகர் ரயில், மாதாந்திர சீசன் கட்டணத்தில் மாற்றம் இல்லை என ரெயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.இந்நிலையில், ரெயில் கட்டண உயர்வை மத்திய அரசு உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என்று நாமக்கல் பாராளுமன்ற உறுப்பினர் மாதேஸ்வரன் எம்பி., வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர் மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஸ்ணவிற்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது..
இந்தியாவில் குறிப்பாக தமிழகத்தில் தற்போது கீழ்த்தட்டு மக்களிடமிருந்து நடுத்தட்டு மக்கள் வரை தற்பொழுது ரயில் சேவையை அதிகம் பயன்படுத்தி வருகின்றனர். குறிப்பாக சேலம் மண்டலத்தில் ரயில் சேவையை பயன்படுத்துவோர் எண்ணிக்கை படிப்படியாக வளர்ந்து வருகிறது. இந்த ஆண்டில் ரயில் கட்டண உயர்த்தியது இது இரண்டாவது முறையாகும். இதனால் ஏழை எளிய நடுத்தர மக்கள் வாழ்வில் இது ஒரு சுமை கல்லாகும். முதலில் 215 கிலோமீட்டருக்கு மட்டும் கட்டண உயர்வு இல்லை 216 ஆவது கிலோ மீட்டரில் இருந்து 2 பைசா வீதம் வகுப்புக்கு ஏற்றார் போல் கட்டணத்தை ரயில்வே நிர்வாகம் உயர்த்தியுள்ளது. இதனால் ஒவ்வொரு பயணிக்கும் ரூ.5 முதல் ரூ.30 வரை கூடுதல் நிதி சுமை ஏற்படும். தற்போது ரயில்வே பயன்பாடு என்பது நடுத்தர மக்களிடையே அதிக அளவில் உள்ளது விழா காலங்களில் ரயில் நிலையங்களில் அலைமோதும் கூட்டம் இதற்கு ஒரு சான்றாகும். குறிப்பாக ஒவ்வொரு நடுத்தர மக்களின் குடும்பச் செலவில் போக்குவரத்து செலவு அதிகம் அதில் ரயில் பயணம் அதனை எளிதாக்குகிறது. இதனை பாதிப்பது போல் ரயில் கட்டணம் உயர்த்தியுள்ளது,இது மட்டுமின்றி தனியார் நிறுவன ஊழியர்கள், வெளி மாவட்டம் வெளி மாநிலங்களில் தங்கி வேலை பார்க்கும் ஊழியர்கள், பள்ளி கல்லூரி மாணவர்கள் என எண்ணற்றோர் ரயில் சேவையை பயன்படுத்தி வருகின்றனர்.இதனால் அவர்கள் கடுமையாக பாதிப்படைந்துள்ளனர்.அவர்களின் சுமையையும் கருத்தில் கொண்டு பொதுமக்களின் கோரிக்கையையும் ஏற்று ரயில் கட்டண உயர்வை உடனடியாக திரும்ப பெற வேண்டும் என்று அந்த கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
Next Story