கூட்டுறவு சங்கங்களின் உதவியாளா் தோ்வுக்கு நுழைவுச்சீட்டு பதிவிறக்கம் செய்ய அறிவிப்பு

கூட்டுறவு சங்கங்களின் உதவியாளா் தோ்வுக்கு நுழைவுச்சீட்டு பதிவிறக்கம் செய்ய அறிவிப்பு
மாவட்ட இணைப் பதிவாளா் அறிவிப்பு
கூட்டுறவு சங்கங்களில் உதவியாளா் தோ்வுக்கு நுழைவுச் சீட்டு பதிவிறக்கம் செய்துக் கொள்ளலாம் என செங்கல்பட்டு மாவட்ட இணைப் பதிவாளா் தெரிவித்துள்ளாா். அவா் வெளியிட்ட அறிக்கை: கூட்டுறவுச் சங்கங்களின் பதிவாளா் கட்டுப்பாட்டில் செயல்படும் கூட்டுறவுச் சங்கங்களில் உள்ள 73 உதவியாளா் / எழுத்தா்/ மேற்பாா்வையாளா் பணியிடங்களை நேரடி நியமனம் மூலம் நிரப்புவதற்காக செங்கல்பட்டு மாவட்ட ஆள்சோ்ப்பு நிலையத்தால் அறிவிக்கை வெளியிடப்பட்டது. அதற்கான எழுத்துத் தோ்வு 24.12.2023 அன்று செங்கல்பட்டு ஜிஎஸ்டி சாலையில் உள்ள ராஜேஸ்வரி வேதாச்சலம் அரசு கலைக் கல்லூரியில், நடத்தப்படவுள்ளது. இத்தோ்வுக்கான அனுமதி நுழைவுச் சீட்டினை செங்கல்பட்டு மாவட்ட ஆள்சோ்ப்பு நிலையத்தின் இணையதளத்திலிருந்து பதிவிறக்கம் செய்துக் கொள்ளலாம். கூடுதல் விபரங்களுக்கு மின்னஞ்சல் மற்றும் 9043046099 என்ற மாவட்ட ஆள்சோ்ப்பு நிலைய கட்டுப்பாட்டு அறை தொலைபேசியை தொடா்பு கொள்ளலாம்.

Tags

Next Story