நொய்யல் அறக்கட்டளை மாதாந்திர ஆலோசனை கூட்டம்.

X
ஆலோசனை கூட்டம்.
கோவை: கொங்கு மண்டலத்தின் முக்கிய நீராதாரமான நொய்யல் நதிக்கு புத்துயிரூட்டுவது தொடர்பான மாதந்திர ஆலோசனை கூட்டம் ஈஷா யோக மையத்தில் நடைபெற்றது.அறக்கட்டளை சார்பில் ஏற்பாடு செய்த இக்கூட்டத்திற்கு பேரூர் ஆதினம் மருத்தால அடிக்களார் தலைமை தாங்கினார்.நொய்யல் நதியில் நிரந்திர நீர் ஆதாரத்தை உறுதிப்படுத்துவது,நதியில் கழிவுநீர் கலக்காமல் தூய்மையாக பராமரிப்பது,பிளாஸ்டிக் கழிவுகள் சேராமல் தடுப்பது உள்ளிட்டவை குறித்து கலந்துரையாடப்பட்டது.நொய்யல் நதி பாயும் நான்கு மாவட்டங்களில் அடுத்த ஐந்து ஆண்டுகளில் இரண்டு கோடி மரங்களை நட காவேரி கூக்குரல் இயக்கம் இலக்கு நிர்ணயித்து செயலாற்றி வரும் நிலையில் பத்து லட்சம் மரக்கன்றுகளை விவசாயிகள் மூலம் நிலங்களில் நடவு செய்யபட்டுள்ளது.மேலும் நொய்யல் ஆற்றை மேம்படுத்த எடுக்கபட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது.இந்த ஆலோசனை கூட்டத்தில்சிரவை ஆதினம் குமரகுருபர சுவாமிகள், சிறு துளி அறக்கட்டளை தலைவர் வனிதா மோகன், சின்மயா மிஷன் அஜய் சைதன்யா,அகில பாரதிய சந்நியாசிகள் சங்கத்தைச் சேர்ந்த சுவாமி வேதானந்தா,ஈஷா அவுட்ரீச் - காவேரி கூக்குரல் இயக்கத்தின் பிரதிநிதி வள்ளுவன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
Next Story
