திருப்பூரில் நாம் தமிழர் கட்சியின் நாடாளுமன்ற வேட்பாளர் அறிமுக கூட்டம்

திருப்பூர் பாண்டியன் நகரில் நாம் தமிழர் கட்சியில் பாராளுமன்ற வேட்பாளர் அறிமுக பொதுக்கூட்டம் நடைபெற்றது.

திருப்பூரில் பின்னலாடை உற்பத்தி மேம்பட தற்சார்பு பொருளாதாரத்தின் தேவையை நாடாளுமன்றத்தில் பேச வாய்ப்பு கேட்டு பிரச்சாரத்தில் ஈடுபட இருப்பதாக நாம் தமிழர் கட்சி திருப்பூர் நாடாளுமன்ற தொகுதி வேட்பாளர் அறிமுக கூட்டத்தில் வேட்பாளர் சீதாலட்சுமி பேட்டி நாம் தமிழர் கட்சி சார்பில் திருப்பூர் பாராளுமன்ற தொகுதி வேட்பாளராக பேராசிரியர் சீதாலட்சுமி அறிவிக்கப்பட்டார். இதனை தொடர்ந்து இன்று திருப்பூர் பாராளுமன்ற தொகுதிக்குட்பட்ட திருப்பூர் வடக்கு சட்டமன்ற தொகுதி பாண்டியன் நகர் பகுதியில் வேட்பாளர் அறிமுக கூட்டம் நடைபெற்றது. இதில் நாம் தமிழர் கட்சியின் திருப்பூர் பாராளுமன்ற தொகுதி வேட்பாளர் சீதாலட்சுமி கலந்து கொண்டிருந்தார்.

அறிமுக கூட்டத்தில் பேசிய அவர் ஆண்டொன்றுக்கு நாடாளுமன்ற உறுப்பினர்கள் தொகுதி வளர்ச்சி நிதியாக 5 கோடி என 5 வருடத்திற்கு 25 கோடி வழங்கக்கூடிய நிலையில் எந்த கட்சியாவது 25 கோடிக்கான செலவை வெளியிட்டுள்ளதா என கேள்வி எழுப்பினார். தான் வெற்றி பெற்று நாடாளுமன்ற உறுப்பினர் ஆனால் தொகுதி வளர்ச்சி நிதியை முழுமையாக தொகுதியின் வளர்ச்சிக்கு பயன்படுத்த போவதாக தெரிவித்தார்.

தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர் திருப்பூர் பின்னலாடை உற்பத்தி குடிசை தொழிலாக இருந்து இன்று அன்னிய செலவாணி ஈட்டி தரக்கூடிய மிகப்பெரிய தொழிலாக வளர்ந்து வரக்கூடிய நிலையில் இங்கு விளையக்கூடிய பருத்தியை நேரடியாக நூல் உற்பத்தியாளர்கள் பெற முடியாத நிலையில் இடைத்தரகர்களுக்கு சென்று அவர்கள் நிர்ணயிக்கும் விலைக்கு பெறக்கூடிய நிலை நீடித்து வருவதாகவும், விவசாயி விளைவிக்கும் பருத்திக்கு கூட அவரால் விலை வைக்க முடியாத நிலை இருப்பதோடு பின்னலாடை உற்பத்திக்கான தற்சார்பு பொருளாதாரம் நலிவடைந்துள்ள நிலையில் இதனை முன்வைத்து நாடாளுமன்றத்தில் குரல் கொடுக்க வாய்ப்பு கேட்டு பிரச்சாரத்தில் ஈடுபட போவதாகவும் , தமிழக முதல்வர் வெளிநாடுகளுக்கெல்லாம் சென்று முதலாளிகளை சந்திக்கும் அவர் நொடிந்து போய் உள்ள பின்னலாடை தொழிலை பாதுகாக்க ஏன் அவர்களை சந்திக்கவில்லை என கேள்வி எழுப்பினார்.

தொடர்ந்து சின்னம் இல்லாததால் பிரச்சாரத்தில் எந்தவித தொய்வும் ஏற்படவில்லை எனவும் நாம் தமிழர் கட்சியை மக்கள், படித்த இளைஞர்கள் தேடத் தொடங்கி விட்டதாகவும் எந்த சின்னம் கிடைத்தாலும் நாம் தமிழர் கட்சிக்கு வெற்றி உறுதி என தெரிவித்தார். அறிமுக கூட்டத்தின் ஒரு பகுதியாக நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் மற்றும் பொதுமக்களுக்கு வேட்பாளர் சீதாலட்சுமி மரக்கன்றுகளை வழங்கி வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்

Tags

Read MoreRead Less
Next Story