புதிதாக கட்டப்பட்டு வரும் சந்தையினை அதிகாரிகள் ஆய்வு
அதிகாரிகள் ஆய்வு
திருவண்ணாமலையில் ரூ.29.25 கோடி மதிப்பில் புதிதாக கட்டப்பட்டு வரும் தினசரி சந்தையினை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர்.
திருவண்ணாமலை நகரில் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை சார்பில் ரூ.29.25 கோடி மதிப்பில் புதிதாக கட்டப்பட்டு வரும் தினசரி சந்தையினை மாவட்ட ஆட்சியர் தெ. பாஸ்கர பாண்டியன் முன்னிலையில் இன்று அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது மாவட்ட கண்காணிப்பு அலுவலர், கூடுதல் தலைமைச் செயலாளர் மற்றும் தகவல் தொழில்நுட்பவியல், டிஜிட்டல் சேவைகள் துறை செயலாளர் திரு. தீரஜ் குமார் ஆகியோர் உடன் இருந்தனர்.
Next Story