சிவகங்கை பூங்காவில் புனரமைக்கும் பணிகளை ஆட்சியர் ஆய்வு
தஞ்சாவூர் மாநகராட்சி சிவகங்கை பூங்காவில், சீர்மிகு நகரம் திட்டத்தின் கீழ் புனரமைக்கும் பணிகள் நடைபெற்று வருவதை மாவட்ட ஆட்சித்தலைவர் தீபக் ஜேக்கப் செவ்வாய்க்கிழமை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
தஞ்சாவூர் மாநகராட்சி சீர்மிகு நகரம் திட்டத்தின் கீழ் சிவகங்கை பூங்காவில் நடைபெற்று வரும் சுற்றுச்சுவர் அமைக்கும் பணி, குழந்தைகள் விளையாட்டு மைதானம், நீச்சல் குளம், நடைபாதை சீரமைக்கும் பணி, கண்காணிப்பு கேமரா அமைக்கும் பணி, அலங்கார விளக்கு அமைக்கும் பணி போன்ற பல்வேறு மேம்பாட்டு பணிகள் நடைபெற்று வருவதை,
நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்து பணிகளை விரைவாக முடித்து பொதுமக்கள் பயன்பட்டிற்கு கொண்டு வர சம்மந்தப்பட்ட அலுவலர்களுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் தீபக் ஜேக்கப் அறிவுறுத்தினார்.
இந்த ஆய்வின் போது மாநகராட்சி ஆணையர் இரா.மகேஸ்வரி, மாநகர பொறியாளர் சேர்மகனி, மாவட்ட சுற்றுலா அலுவலர் நெல்சன், உதவி செயற்பொறியாளர் மனோகரன், உதவி பொறியாளர் ஆனந்தி, சுகாதார அலுவலர் தங்கவேல் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.