ஓமலூர் கண்ணனூர் மாரியம்மன் கோவில் நிலம் அளவீடு

ஓமலூரில் கண்ணனூர் மாரியம்மன் கோவிலில் சொந்தமான நிலம் அளவீடு செய்யப்பட்டது.
சேலம் மாவட்டம், ஓமலூர் பேரூராட்சி பகுதியில் ஸ்ரீ கண்ணனூர் மாரியம்மன் கோவிலை சுற்றிலும் சுமார் 16 சென்ட் நிலம் இந்த கோவிலுக்கு சொந்தமாக உள்ளது. இந்த நிலத்தில் தனி நபர்கள் ஆக்கிரமிப்பு செய்து வீடு கட்டி இருப்பதாகவும், அதை அளவீடு செய்து ஆக்கிரமிப்பை அகற்றி கொடுக்க வேண்டுமெனவும் திருத்தொண்டத் பேரவையின் தலைவர் ராதாகிருஷ்ணன் வருவாய் துறையினருக்கு கோரிக்கை மனுவை அளித்தார். இதையடுத்து அந்த கோரிக்கை மனுவின் அடிப்படையில் வருவாய்த்துறை அதிகாரிகள் அந்த கோவில் சுற்றிலும் உள்ள நிலத்தை அளவீடு செய்தனர். இதில் 16சென்ட் நிலம் சுமார் 30லட்சம் மதிப்பீட்டில் உள்ள நிலத்தை அளவீடு செய்து கோவிலுக்கு சொந்தம் என்று கண்டறியப்பட்டது. தொடர்ந்து கோவிலுக்கு சொந்தமான நிலத்தில் உள்ள ஆக்கிரமிப்பை அகற்ற உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என இந்து அறநிலையத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த சம்பவத்தில் ஏதேனும் அசம்பாவிதம் நடக்காமல் இருக்க ஓமலூர் தீயணைப்பு துறையினர் மற்றும் ஓமலூர் டிஎஸ்பி சங்கீதா தலைமையில் சுமார் 100 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு நில அளவீடு செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கதாகும்.

Tags

Next Story