ஓவர் லோடு டிராக்டர்களுக்கு கடிவாளம் போடுவது அவசியம் !

ஓவர் லோடு டிராக்டர்களுக்கு கடிவாளம் போடுவது அவசியம் !

ஓவர் லோடு

போக்குவரத்து துறையினர், டிராக்டர்களில், எவ்வளவு எடையுள்ள பொருட்களை ஏற்றிச் செல்ல வேண்டும் என, கட்டுப்பாடு விதிக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் இடையே கோரிக்கை எழுந்துள்ளது.
காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத், குன்றத்துார், ஸ்ரீபெரும்புதுார், உத்திரமேரூர் ஆகிய ஐந்து ஒன்றியங்களில், 274 ஊராட்சிகள் உள்ளன. இதில், நெல் அறுவடை, நெல் நடவு செய்வது உள்ளிட்ட பல்வேறு விவசாய பணிகள் மற்றும் செங்கல் அறுவடை, விற்பனைக்கு எடுத்துச் செல்வது உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்கு, விவசாயத்திற்கு உபயோகப்படுத்தப்படும் டிராக்டர்களை பயன்படுத்துகின்றனர். விவசாய பணிகளுக்கு அதிகம் பயன்படுத்த வேண்டிய டிராக்டரை, செங்கல் விற்பனைக்கு எடுத்துச் செல்கின்றனர். டிராக்டரில், 2,000 எண்ணிக்கை செங்கல்லுக்கு பதிலாக, 3,000 எண்ணிக்கை செங்கற்களை செங்கல் சூளை போடும் விவசாயிகள் ஏற்றிச் செல்கின்றனர். அளவுக்கு அதிகமாக லோடு ஏற்றிச் செல்லும் போது, டிராக்டர் விபத்தில் சிக்க நேரிடுகிறது. குறிப்பாக, கிராம சாலைகளின் வழியாக செல்லும் போது, பின் தொடரும் வாகனங்கள் குறைவு. அதுவே, பிரதான மாவட்ட சாலைகள் மற்றும் தேசிய நெடுஞ்சாலைகளில் டிராக்டர் விபத்தில் சிக்கும் போது, பெரிதளவில் அடுத்தடுத்த விபத்தை ஏற்படுத்தும் என, அச்சம் நிலவி வருகிறது. எனவே, கண்காணிக்க வேண்டிய வட்டாரப் போக்குவரத்து துறையினர், டிராக்டர்களில், எவ்வளவு எடையுள்ள பொருட்களை ஏற்றிச் செல்ல வேண்டும் என, கட்டுப்பாடு விதிக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் இடையே கோரிக்கை எழுந்துள்ளது.

Tags

Read MoreRead Less
Next Story