பஞ்சாயத்து குடிநீர் டேங்க் சேதம்; ஒருவர் கைது

திருமங்கலத்தில் பஞ்சாயத்து குடிநீர் டேங்க் சேதப்படுத்திய விவகாரம் தொடர்பாக ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி தாலுக்கா, மேற்கு கூடலூர் பெரிய திருமங்கலம் பகுதியைச் சேர்ந்தவர் நல்லசிவம் வயது 58 இவர் செய்ய கூடலூர் ஊராட்சியில் துணை தலைவராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில் டிசம்பர் 24ஆம் தேதி அதே ஊராட்சிக்கு உட்பட்ட ரவி என்கிற ராமசாமி மகன் ரஞ்சித், சிவகாமி வீட்ட அருகே அமைக்கப்பட்டுள்ள பிளாஸ்டிக் வாட்டர் டேங்கில் நீர் பிடிக்க சென்றுள்ளார். அப்போது, நீர் குறைந்த வேகத்தில் வந்துள்ளது. இதனால் கோபமடைந்த ரஞ்சித் பஞ்சாயத்து நிர்வாகத்தால் அமைக்கப்பட்டுள்ள வாட்டர் டேங்க் அறிவாளால் வெட்டி சேதப்படுத்தினார்.

இதனைப் பார்த்த ஊராட்சி மன்ற துணைத் தலைவர் நல்லசிவம் வாட்டர் டேங்க் ஏன் வெற்றி நாயகன தட்டிக் கேட்டுள்ளார். இதனால் மேலும் கோபமடைந்த ரஞ்சித் நல்ல சிவத்தை தகாத வார்த்தை பேசி கையில் வைத்திருந்த அருவாளை காட்டி மிரட்டல் விடுத்துள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக நல்ல சிவம், சின்ன தாராபுரம் காவல் நிலையத்தில் அளித்த புகார் பேரில், சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர், இது தொடர்பாக ரஞ்சித்தை கைது செய்து, அவர் மீது வழக்கு பதிவு செய்து, நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்து நடவடிக்கை மேற்கொண்டனர் சின்னதாராபுரம் காவல்துறையினர்.

Next Story