குன்னம் அருகே அரசு நிலத்தை மீட்டு தர கோரி மனு

குன்னம் அருகே அரசு நிலத்தை மீட்டு தர கோரி மனு

மனு அளித்தவர்கள்

குன்னம் அருகே அரசு நிலத்தை ஆக்கிரமிப்பு செய்தவரிடம் இருந்து மீட்டு தர கோரி கிராம மக்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

பெரம்பலூர் மாவட்டம், குன்னம் வட்டம், பென்னகோணம் கிராமக்கள் சார்பில், அக் கிராமத்தைச் சேர்ந்த சிலர் பிப்ரவரி 12ஆம் தேதி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியர் சந்தித்து மனு அளித்தனர்.

இதனை தொடர்ந்து அவர்கள் தெரிவிக்கையில், தங்கள் கிராமத்தில் உள்ள 58 சென்ட் புறம்போக்கு நிலத்தை தனி நபர் ஒருவர் ஆக்கிரமிப்பு செய்துள்ளார், மேலும் அவர் பெயருக்கு பட்டா மாற்றம் செய்வதற்கான நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்,

ஆகையால் அதனை தடுத்து நிறுத்தி அரசு புறம்போக்கு நிலத்தை மக்கள் பயன்பாட்டிற்கு வழங்க , மீட்டு தர வேண்டும் என கேட்டு மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்திருப்பதாக தெரிவித்தனர்.

Tags

Read MoreRead Less
Next Story