வேளாங்கண்ணி அருகே மின்சாரம் தாக்கி பிளம்பர் பலி

வேளாங்கண்ணி அருகே மின்சாரம் தாக்கி பிளம்பர் பலி

காவல் நிலையம்

நாகை மாவட்டம் வேளாங்கண்ணி அருகே மின்கம்பி மீது இரும்பு கம்பியில் உரசியதில் மின்சாரம் தாக்கி பிளம்பர் பலியானர்.

நாகை மாவட்டம் வேளாங்கண்ணி அருகே உள்ள காரப்பிடாகை ஸ்டாலின் நகர் பகுதியை சேர்ந்தவர் சந்திரசேகர் திருப்பூண்டி முதலியார் தெரு பகுதியை சேர்ந்தவர் அருள்பழனி (42). இருவரும் பிளம்பர்கள்.

சம்பவத்தன்று இவர்கள் 2பேரும் கீழையூர் அருகே உள்ள காரைநகர் பகுதியை சேர்ந்த ஒருவருடைய வீட்டில் ஆழ்துளை கிணறு மற்றும் கைப்பம்பு அமைக்கும் பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது இரும்பு குழாய் எதிர்பாராதவிதமாக மேலே இருந்தவந்த மின் கம்பியில் உரசியது. இதில் மின்சாரம் தாக்கி 2 பேரும் காயம் அடைந்தனர்.

இருவரையும் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் நாகை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துல மனையில் சேர்தனர் . டாக்டர்கள் பரிசோதித்தனர். சந்திரசேகர் ஏற்கனவே இறந்து விட்டது தெரியவந்தது. அருள் பழனிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து கீழ்வேளூர் போலீஸ் சார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்

Tags

Next Story