பாரம்பரிய உடையில் காவலர்கள் பொங்கல் கொண்டாட்டம்

பாரம்பரிய உடையில் காவலர்கள் பொங்கல் கொண்டாட்டம்

பொங்கல் விழா 

அன்னூர் காவல் நிலைய போலீசார் பாரம்பரிய உடையில் பொங்கல் விழாவை கொண்டாடினர். மேலும் பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடந்தன.

கோவை மாவட்டம் அன்னூர் காவல் நிலையத்தில் இன்று பொங்கல் விழா உற்சாகமாக கொண்டாடப்பட்டது. காவலர்கள் தங்களது வழக்கமான காக்கி சீருடையை அணியாமல் கொண்டாட முடிவு செய்து தங்களது வீடுகளில் கொண்டாடுவது போல் பாரம்பரிய முறையில் ஆண் காவலர்கள் வேட்டி, சட்டையிலும் பெண் காவலர்கள் சேலை அணிந்தும் கலந்து கொண்டனர்.காவல் நிலைய வளாகத்தில் காவலர்கள் அனைவரும் ஒன்றிணைந்து புதுப்பானையில் பொங்கலிட்டு அங்குள்ள விநாயகர் கோயிலில் சிறப்பு வழிபாடு நடத்தினர்.

இதனை தொடர்ந்து பாரம்பரிய மிக்க குதிரை வண்டியில் அவர்கள் பயணம் செய்தும், குதிரைகளுக்கு உணவு வழங்கியும் மகிழ்ந்தனர். தொடர்ந்து காவலர்களுக்கு மியூசிக் சேர்,கயிறு இழுத்தல்,உறியடித்தல் உள்ளிட்ட போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டன. முன்னதாக ஜமாப் இசைக்கு ஏற்ப குதிரை நடனமாடியது பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது.

Tags

Next Story