வேட்டவலத்தில் தர்மசம்வர்த்தினி சமேத அகத்தீஸ்வரர் கோயிலில் பிரதோஷ வழிபாடு

வேட்டவலத்தில் தர்மசம்வர்த்தினி சமேத அகத்தீஸ்வரர் கோயிலில் பிரதோஷ வழிபாடு

பிரதோஷ வழிபாடு

வேட்டவலத்தில் தர்மசம்வர்த்தினி சமேத அகத்தீஸ்வரர் கோயிலில் பிரதோஷ வழிபாடு சிறப்பாக நடைபெற்றது.
திருவண்ணாமலை மாவட்டம் வேட்டவலத்தில் பழமை வாய்ந்த தர்மசம்வர்த்தினி சமேத அகத்தீஸ்வரர் கோயில் உள்ளது. இந்த கோயிலில் மாசி மாத வளர்பிறை பிரதோஷ சிறப்பு வழிபாடு நடந்தது. இதையொட்டி சுயம்பு மூலவர் அகத்தீஸ்வரர், தர்மசம்வர்த்தினி அம்மன் மற்றும் கோயிலின் பிரதான நந்திக்கு பால், பன்னீர், சந்தனம், இளநீர், பஞ்சாமிர்தம் ஆகியவை கொண்டு சிறப்பு அபிஷேகம் நடந்தது. பின்னர் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளிய நந்தி பகவானை திரளான பக்தர்கள் தரிசனம் செய்தனர்,முடிவில் பக்தர்களுக்கு கோயில் சார்பில் பிரசாதங்கள் வழங்கப்பட்டது.

Tags

Read MoreRead Less
Next Story