தனியார் நிதி நிறுவன பணியாளர் தற்கொலை
காவல் நிலையம்
அம்பை அருகே சமூக வலைதளத்தில் புகைப்படத்தை ஆபாசமாக சித்தரித்ததால் தனியார் நிதி நிறுவன பணியாளர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம் அருகே உள்ள சிவந்திபுரம் சக்திநகரை சேர்ந்த கோயில் பிள்ளை மகன் இம்மானுவேல்(23). பட்டதாரியான இவர் திருநெல்வேலியில் தனியார் நிதி நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார்.இவர் நேற்று இரவு வீட்டில் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து அம்பை போலீசார் விசாரணை மேற்கொண்டதில் வலைதளத்தில் தனது படம் ஆபாசமாக சித்திரிக்கப்பட்டதால் தற்கொலை செய்ததாக தெரியவந்தது.
Next Story