புதிய தார் சாலை அமைத்து தரக்கோரி பொதுமக்கள் கோரிக்கை

புதிய தார் சாலை அமைத்து தரக்கோரி பொதுமக்கள் கோரிக்கை

தார்சாலை அமைக்க கோரிக்கை

புதுக்கோட்டை மாவட்டம், கொங்காரக்கோட்டை பகுதியில் புதிய தார்சாலை அமைத்து தர கோரிக்கை விடுத்துள்ளனர்.

புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடி தாலுகா பல்லவராயன் பத்தை ஊராட்சி கொங்காரக்கோட்டை கிராமம் உள்ளது இந்த கிராமத்தில் 60க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்நிலையில் வடவாளம் புதுப்பட்டி நெடுஞ்சாலையின் பிரிவு சாலையான ஆத்தியடி பட்டி மற்றும் கொங்காரக்கோட்டை தார் சாலை 15 வருடங்களுக்கு முன்பு போடப்பட்டதாக கூறப்படுகிறது. இந்த தார் சாலையானது குண்டும் குழியுமாக காட்சி அளிக்கிறது தற்போது பெய்த மழையால் குண்டு குழியினுள் மழை நீர் தேங்கி பொதுமக்கள் செல்வதற்கு வழி இல்லாமல் அவதியுற்று வருகின்றனர்.

இரவு நேரங்களில் இருசக்கர வாகனத்தில் செல்லும் பொழுது தடுக்கி விழுந்து விபத்துக்கள் நேரிட்டு பலர் சிகிச்சை பெற்று வந்ததாக கூறப்படுகிறது. மேலும் பள்ளி செல்லும் மாணவர்கள் இந்த சாலையின் வழியாகத்தான் பள்ளிக்கு சென்று வருவதாகவும் இதனால் பள்ளி மாணவர்கள் பெரும் அவதியுற்று வருகின்றனர். மேலும் இந்த சாலையை ஒரு சில தனி நபர்கள் ஆக்கிரமிப்பு செய்துள்ளதாகவும் ஆக்கிரமிப்பு மற்றும் குண்டும் குழியுமான தார் சாலை அப்புறப்படுத்தி மாவட்ட ஆட்சியர் மற்றும் தமிழக அரசு போர்க்கால அடிப்படையில் புதிய தார் சாலை அமைத்து தருமாறு அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags

Read MoreRead Less
Next Story