ராசிபுரம் பெருமாள் திருக்கோவில் பாதுகாப்பு குழு ஆலோசனைக் கூட்டம்

ராசிபுரம் பெருமாள் திருக்கோவில் பாதுகாப்பு குழு ஆலோசனைக் கூட்டம்

ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொண்டவர்கள்

ராசிபுரம் பொன் வரதராஜ பெருமாள் திருக்கோவில் பாதுகாப்பு குழு ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருள்மிகு பொன் வரதராஜப் பெருமாள் கோயில் அருகில் 50 ஆண்டுகளாக வளர்ந்து உயர்ந்து நின்ற நிழல் தரும் அத்திமரத்தை அடியோடு துண்டுதுண்டாக வெட்டியும், கோயில் முன் வளர்ந்த அரிய வகை - புனித மரமான வன்னி மரம் மற்றும் வில்வ மரங்களை ஆட்களை வைத்து வெட்டிய அரசியல் கட்சி பிரமுகர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க அரசு நிர்வாகத்தை வலியுறுத்திட ஊர் பொதுமக்கள் மற்றும் அருள்மிகு பொன் வரதராஜ பெருமாள் திருக்கோவில் பாதுகாப்பு குழு போராட்டக் குழுவினரின் ஆலோசனைக் கூட்டம் பெருமாள் கோயில் முன்பு மேட்டுத் தெரு பகுதியில் நடைபெற்றது.

இந்தக் கூட்டத்தில் முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இந்த அரிய வகை கோவில் மரங்களை வெட்டிய நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி திங்கட்கிழமை நாமக்கல் மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மற்றும் கோயில் அறங்காவலர் குழு தலைவர், மற்றும் இந்து அறநிலைத்துறை அதிகாரிகள் ஆகியோரிடத்தில் இப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள், மற்றும் போராட்ட குழுவினர் நேரில் சென்று மனு அளிப்பதாக ஒரு மனதாக தீர்மானம் நிறைவேற்றினர்.

தொடர்ந்து இதற்கு உரிய நடவடிக்கை எடுக்கவில்லை எனில் பொங்கல் பண்டிகை தொடர்ந்து மிகப்பெரிய போராட்டங்கள் நடத்தப் போவதாக குழுவின் அமைப்பினர் தெரிவித்தனர்.

இந்த நிகழ்வில் நல்வினைச் செல்வன், லட்சுமணன், ராஜேந்திரன், யுவராஜன், மோகன்ராஜ், வி.பாலு, சர்மா, நல்வினை விஸ்வராஜு, கட்டனாச்சம்பட்டி என். கோபால், சீனி, காட்டூர் பன்னீர்செல்வம், வெங்கடாசலம், வி. நகர் தர்மராஜ், கட்டனாச்சம் பட்டி மாரியப்பன், டைலர் மனோகரன், சித்தேஸ்வரன், டி. பாலு, அ.வாஞ்சிநாதன், ரத்தினம், பா.மோகன்தாஸ், கார்த்தி, ஆட்டோ பெரியசாமி, மோகன், பூபாலன், வெற்றிச்செல்வன் உள்ளிட்ட பலர் இந்த ஆலோசனைக் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

தொடர்ந்து நிர்வாகிகள் பேசும் போது பசுமையான மருத்துவ குணம் கொண்ட அரிய வகை மரங்களை பாதுகாக்க-இயற்கை சூழலை பாதுகாக்க அனைவரும் வருக என அழைப்பு விடுத்தனர்.

Tags

Next Story