ஈரநிலங்களை முறைப்படுத்தி பாதுகாப்பதால் நிலத்தடி நீர்மட்டம் உயரும்

ஈரநிலங்களை முறைப்படுத்தி பாதுகாப்பதால் நிலத்தடி நீர்மட்டம் உயரும்

சான்றிதழ் வழங்கல் 

உலக ஈரநில தின விழாவில்ஈரநிலங்களை முறைப்படுத்தி பாதுகாப்பதால் நிலத்தடி நீர்மட்டம் உயரும் என கலெக்டர் பிருந்தாதேவி தெரிவித்துள்ளார்.

சேலம் ஏற்காடு அடிவாரம் பகுதியில் உள்ள குரும்பப்பட்டி உயிரியியல் பூங்காவில் வனத்துறை சார்பில் உலக ஈரநில தின விழா நடைபெற்றது. விழாவுக்கு கலெக்டர் பிருந்தாதேவி தலைமை தாங்கினார்.

பின்னர் அவர் பேசுகையில், `ஈரநிலங்களும், மனித நல்வாழ்வும்', என்பதை கருப்பொருளாக கொண்டு 2024-ம் ஆண்டு உலக ஈர நிலங்கள் தினம் கொண்டாடப்படுகிறது. ஈரநிலங்கள் அரிதான உயிரினங்கள் முதல் மனித சமூகங்கள் வரை வாழ்க்கையை வளர்க்கின்றன. இயற்கையை பாதுகாப்பதில் இளைய தலைமுறையினர் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும்.

மாணவ, மாணவிகள் பறவைகளை பற்றி படிப்பதும், ஈரநிலங்களைப் பற்றி படித்து ஆராய்ச்சி செய்வதும் போன்ற பல்வேறு படிப்புகள் உள்ளன. இதன்மூலம் சுற்றுச்சூழல் மற்றும் பல்லுயிர் பெருக்கத்திற்கு உதவ வேண்டும். நீர்நிலைகளில் குப்பைகள் கொட்டுவதை தவிர்க்க வேண்டும்.

ஈர நிலத்தினை பாதுகாப்பது குறித்த விழிப்புணர்வை ஒவ்வொரு மாணவ, மாணவிகளும் அறிந்துக்கொள்ள வேண்டிய ஒன்றாகும். ஈரநிலங்களை முறைப்படுத்தி பாதுகாப்பதால் நிலத்தடி நீர்மட்டம் உயர்வதுடன் பறவைகள், வன உயிரினங்கள் தாக்கத்தை போக்கும். மேலும் உள்ளூர் மக்களின் வாழ்வாதராம் மற்றும் விவசாயம் செழிக்கவும் உபயோகமாக இருக்கும்.

குடிநீர் தேவைகளை வெகுவாக பூர்த்தி செய்வதுடன் சூழலில் மற்றும் உயிரியல் பரிமாணங்கள் பாதுகாக்கப்படுகிறது. இவ்வாறு பேசினார். இதையடுத்து ஈரநில தினத்தையொட்டி நடைபெற்ற பல்வேறு விழிப்புணர்வு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு கேடயம் மற்றும் சான்றிதழ்களை கலெக்டர் பிருந்தாதேவி வழங்கினார்.

விழாவில் மாவட்ட வன அலுவலர் கஷ்யப் ஷஷாங் ரவி, உதவி வன பாதுகாவலர் செல்வக்குமார், வன சரக அலுவலர் துரைமுருகன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

Tags

Next Story