அங்கித்திவாரி வழக்கில் நிபந்தனை தளர்வு
திண்டுக்கல் அரசு மருத்துவரிடம் ரூ.20 லட்சம் லஞ்சம் பெற்றதாக கைது செய்யப்பட்ட அமலாக்கத்துறை அதிகாரி அங்கித் திவாரி வழக்கில் நிபந்தனை தளர்வு வழங்கப்பட்டுள்ளது.
திண்டுக்கல் மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீசாரால் கடந்த டிசம்பர் 1ஆம் தேதி மதுரை அமலாக்கத்துறை அதிகாரி அங்கிட் திவாரி கைது செய்யப்பட்டார். பின்னர் திண்டுக்கல் தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை மற்றும் திண்டுக்கல் தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றம் ஆகியவை அங்கிட் திவாரியின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்தது. இதனையடுத்து உச்ச நீதிமன்றத்தில் ஜாமீன் கோரி அங்கிட் திவாரி சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை ஏற்றுக் கொண்ட உச்ச நீதிமன்றம் நிபந்தனை ஜாமீன் அளிக்கும்படி கீழமை நீதிமன்றத்திற்கு உத்தரவிட்டது.
இதனை அடுத்து கடந்த மார்ச் 22 ஆம் தேதி தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் ஜாமீன் கேட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. மேலும் நாள்தோறும் நீதிமன்றத்தின் வேலை நாட்களில் நீதிமன்றத்தில் ஆஜராகி கையெழுத்திட வேண்டும் என உத்தரவு பிறப்பித்தார். இதனைத் தொடர்ந்து நிபந்தனை தளர்வு கேட்டு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். இதனை விசாரித்த நீதிபதி தினமும் ஆஜராகி கையெழுத்து இட வேண்டும் என்ற நிபந்தனையை தளர்த்தி வாரம் ஒரு முறை கையெழுத்து இட வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.