பள்ளி மாணவர்களுக்கு நிவாரணப் பொருட்கள்

பள்ளி மாணவர்களுக்கு நிவாரணப் பொருட்கள்

தூத்துக்குடியில் தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில் பள்ளி மாணவர்களுக்கு நிவாரணக பொருட்கள் 

தூத்துக்குடியில் தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில் பள்ளி மாணவர்களுக்கு நிவாரண பொருட்கள்
தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மானூர் வட்டாரம் பெண் ஆசிரியர்கள் மனமகிழ் மன்றம் சார்பாக தூத்துக்குடி மாவட்டம் அலங்கார தட்டு என்ற பகுதியில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள பள்ளி மாணவர்களுக்கு தேவையான எழுது பொருட்கள், வண்ண ஆடைகள், எவர்சில்வர் தட்டு, டம்ளர், டிபன் பாக்ஸ் முறுக்கு, அல்வா போன்ற பொருட்கள் அடங்கிய தொகுப்பினை மாநில தலைவர் மூ.மணிமேகலை தலைமையில் பொதுச் செயலாளர் ச.மயில் முன்னிலையில் வழங்கப்பட்டது. மாநிலச் செயலாளர் மு.பிரமநாயகம், தூத்துக்குடிமாவட்ட செயலாளர் செல்வராஜ், தலைவர் கலை உடையார், கல்வி மாவட்ட செயலாளர் ரவிந்திரராஜன், கருங்குளம் வட்டார செயலாளர் லூயிஸ் ராயன், மாநில செயற்குழு உறுப்பினர் அண்ணாதுரை, கல்வி மாவட்ட தலைவர் உமையொருபாகம், மாவட்டத் துணைச் செயலாளர் உஷா, வட்டாரச் செயலாளர் செண்பகராஜன், மனமகிழ் மன்ற பொறுப்பாளர்கள் தேவி ஸ்ரீ மாரியம்மாள், விஜயலட்சுமி, முத்துலட்சுமி, மேரி ஞான ஜோதி, கஸ்தூரி, சந்திரகலா .ஆகியோர் கலந்து கொண்டனர். இவர்களுடன் கரூர் மாவட்ட செயலாளர் ஜெயராஜ், நாமக்கல் மாவட்ட செயலாளர் மாதேஷ், ராமநாதபுரம் மாவட்ட செயலாளர் முனியசாமி, ஈரோடு மாவட்ட செயலாளர் மணி, நாகை மாவட்ட செயலாளர் சித்ரா, காந்தி மற்றும் மாநில மாவட்ட வட்டார நிர்வாகிகள் கலந்து கொண்டனர்

Tags

Next Story