இறந்தவரின் குடும்பத்திற்கு நிவாரணம்
வெம்பக்கோட்டை அருகே பட்டாசு ஆலை வெடி விபத்தில் இறந்தவரின் குடும்பத்திற்கு நிவாரணம் வழங்கப்பட்டது
விருதுநகர் மாவட்டம், வெம்பக்கோட்டை அருகே பனையடிபட்டி கிராமத்தில் இயங்கிவந்த தனியாருக்குச் சொந்தமான பட்டாசு ஆலையில் நேற்று எதிர்பாராதவிதமாக ஏற்பட்ட வெடிவிபத்தில்,பனையடிப்பட்டி கிராமம், கண்டியாபுரத்தைச் சேர்ந்த சண்முகராஜ் (வயது 36) சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இவ்விபத்தில் உயிரிழந்தவரின் குடும்பத்திற்கு ரூ.3 இலட்சம் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்க தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் உத்தரவிட்டிருந்தார். அதனடிப்படையில் சண்முகராஜ் (வயது 36) என்பவரின் குடும்பத்தினருக்கு முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து ரூ.3 இலட்சத்திற்கான காசோலையினை மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் ஜெயசீலன் இன்று வழங்கினார்.
Next Story