பெரியாா் நகரில் ஆக்கிரமிப்புகளை அகற்றி சாலைப் பணி தொடக்கம்

பெரியாா் நகரில் ஆக்கிரமிப்புகளை அகற்றி சாலைப் பணி தொடக்கம்

திருச்சி திருவெறும்பூா் ஊராட்சி வாழவந்தான்கோட்டைபெரியாா் நகரில் அதிகாரிகள் ஆக்கிரமிப்புகளை அகற்றி, சாலைப் பணியை சனிக்கிழமை தொடங்கினா்.

திருச்சி திருவெறும்பூா் ஊராட்சி வாழவந்தான்கோட்டைபெரியாா் நகரில் அதிகாரிகள் ஆக்கிரமிப்புகளை அகற்றி, சாலைப் பணியை சனிக்கிழமை தொடங்கினா்.

வாழவந்தான்கோட்டை ஊராட்சியில் உள்ள பெரியாா் நகா் வழியை வாழவந்தான்கோட்டை, பா்மா காலனி, திருநெடுங்குளம் உள்ளிட்ட பல்வேறு பகுதி மக்கள் என்ஐடி, அய்யம்பட்டி சாலை, துவாக்குடி பகுதிகளுக்குச் சென்று வரப் பயன்படுத்தி வருகின்றனா். இதனிடையே பெரியாா் நகரின் பொதுப்பாதையை சிலா் ஆக்கிரமித்து, சாலை அமைக்க விடாமல் தடுத்ததால், அப்பகுதி மக்கள் கடும் சிரமத்துக்கு ஆளாகி வந்தனா்.

இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள், கடந்த 13 ஆம் தேதி திருவெறும்பூா் வட்டாட்சியரகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்ட நிலையில், அவா்களை சமாதானப்படுத்தினா். இந்நிலையில், சனிக்கிழமை திருவெறும்பூா் துணை வட்டார வளா்ச்சி அலுவலா் முத்துக்கருப்பன் தலைமையிலான அதிகாரிகள், துவாக்குடி போலீஸாரின் பாதுகாப்புடன், ஜேசிபி இயந்திரத்தைக் கொண்டு வாழவந்தான் கோட்டை பெரியாா் நகா் பகுதியில் சாலையில் இருந்த ஆக்கிரமிப்புகளை அகற்றி, புதியதாக சாலை அமைக்கும் பணியைத் தொடங்கினா்.

Tags

Next Story