வேலூரில் அரசு பஸ் கண்டக்டர் பணியிடை நீக்கம்

வேலூரில் அரசு பஸ் கண்டக்டர் பணியிடை நீக்கம்

போக்குவரத்து கழகம்

வேலூரில் பயணியுடன் கூடுதல் கட்டணம் வசூலித்த அரசு பேருந்து நடத்துனர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

சென்னை கிளாம்பாக்கத்தில் இருந்து செஞ்சிக்கு செல்ல ஒரு பெண் உள்பட 3 பயணிகள் அரசு பஸ்சில் பயணம் செய்தனர். பஸ்சில் கண்டக்டராக ராமசாமி என்பவர் பணியாற்றி உள்ளார். பயணிகள் 3 பேர் ராமசாமியிடம் செஞ்சிக்கு பயணச்சீட்டு கேட்டனர்.

ஆனால் கண்டக்டர் அவர்களுக்கு செஞ்சிக்கு ரூ.130-க்கு டிக்கெட் வழங்காமல் கிளாம்பாக்கத்தில் இருந்து திருவண்ணாமலைக்கு பயணக்கட்டணமான ரூ.175-க்கு டிக்கெட் வழங்கி உள்ளார். இதுகுறித்து தமிழ்நாடு போக்குவரத்து கழக விழுப்புரம் மேலாண்மை இயக்குனருக்கு புகார் சென்றது.

அவர் இதுகுறித்து விசாரணை செய்து நடவடிக்கை எடுக்க வேலூர் மண்டல பொதுமேலாளர் எட்வின் சாமு வேலுவுக்கு அறிவுறுத்தினார். அதன்பேரில் பொது மேலாளர் நடத்திய விசாரணையில் கண்டக்டர் கூடுதல் கட்டணம் வசூல் செய்தது தெரிய வந்தது. இதையடுத்து அவர் மீது துறை ரீதியான நடவடிக்கையாக தற்காலிக பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.

Tags

Next Story