திருப்பூரில் குழந்தையின் மூக்கில் சிக்கிய பிளாஸ்டிக் பொருள் அகற்றம்
மூக்கில் சிக்கிய பிளாஸ்டிக்
திருப்பூர், குழந்தையின் மூக்கில் சிக்கிய பிளாஸ்டிக் பொருளை அகற்றி டாக்டர்களுக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது. திருப்பூர் மாவட்டம் தாராபுரம் பகுதியை சேர்ந்த தம்பதியின் மகள் கிருத்திகா. வயது 2Ñ. குழந்தைக்கு மூச்சு விடுவதில் சிரமம் ஏற்பட்டுள்ளது.
இதனால் அதிர்ச்சியடைந்த பெற்றோர் குழந்தையை திருப்பூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்து வந்தனர். இந்நிலையில் குழந்தையை பரிசோதித்த டாக்டர்கள் மூக்கில் ஏதோ சிக்கி இருப்பதை கண்டுபிடித்தனர்.
மேலும், காது மூக்கு தொண்டை பிரிவு சிறப்பு சிகிச்சை பிரிவு மூத்த உதவி பேராசிரியர் சுரேஷ்ராஜ்குமார் மற்றும் குழுவினர் குழந்தையை பரிசோதித்தனர். இதில் மூக்கின் பின்புறம் ஒரு பொருள் சிக்கி இருந்தது தெரியவந்தது.இதனால் இதனை அகற்ற மருத்துவ குழுவினர் முடிவு செய்தனர். அதன்படி மயக்கவியல் டாக்டர் நித்தியானந்தன், மருத்துவ உதவியாளர் சிலம்பரசன் குழந்தைகளுக்கு மயக்க மருந்து செலுத்தினார்.
எண்டோஸ்கோபி மூலமாக மூக்குக்குள் குழாய் விட்டு கேமரா உதவியுடன் உள்ளே இருந்த விளையாட்டுª பொருள் அகற்றப்பட்டது.
இதன் பின்னர் குழந்தையின் மயக்கம் தெளிந்த போது, மூச்சு விடுவதில் எந்த சிரமமும் இல்லை. சிறப்பான முறையில் குழந்தையின் மூக்கில் சிக்கிய பிளாஸ்டிக் பொருளை அகற்றிய டாக்டர்களுக்கு, டீன் முருகேசன் பாராட்டு தெரிவித்தார்.