பேருந்துகளில் அதிக ஒலி எழுப்பக்கூடிய ஹார்ன்கள் அகற்றம்

பெரம்பலூரில் 11 பேருந்துகளில், அதிக ஒலி எழுப்பக்கூடிய ஹார்ன்கள் அகற்றம், a

வட்டார போக்குவரத்து அலுவலர் நடவடிக்கை அரசு மற்றும் தனியார் பேருந்துகளில் அதிக ஒலி எழுப்பக்கூடிய காற்றொலிப்பான் எனப்படும் ஏர் ஹார்ன் மற்றும் கண்கூசும் முகப்பு விளக்குகள் மற்றும் பல வண்ண ஒளி விளக்குகள் பொருத்தியும், ஆடியோ மற்றும் வீடியோ மூலம் அதிக ஒலி எழுப்பியும் விதிமுறைகளுக்கு புறம்பாக இயக்கப்படும் வாகனங்கள் மீது வந்த புகாரை தொடர்ந்து, சென்னை போக்குவரத்து மற்றும் சாலை பாதுகாப்பு ஆணையர் மற்றும் பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் கற்பகம் ஆகியோரின் உத்தரவின் படி, பெரம்பலூர் வட்டார போக்குவரத்து அலுவலர் பொறுப்பில் உள்ள பிரபாகரன், மோட்டார் வாகன ஆய்வாளர் பொறுப்பில் உள்ள ராஜாமணி ஆகியோர் பெரம்பலூர் புதிய பஸ் நிலையத்தில் சிறப்பு வாகன தணிக்கை மேற்கொண்டனர்.

அப்போது 21 அரசு மற்றும் தனியார் பேருந்துகளில் சோதனை மேற் கொண்டதில், அதில் 11 பேருந்துகளில் அதிக ஒலி எழுப்பக்கூடிய காற்றொலிப்பான்களும் மற்றும் 4 பஸ்களில் கண்கூசும் முகப்பு விளக்குகள் அகற்றப்பட்டு தணிக்கை அறிக்கை இடப்பட்டு அபராத தொகையாக ரூ.40 ஆயிரம் விதிக்கப்பட்டது. இதேபோல் வாகன தணிக்கை தொடர்ந்து நடைபெறும் என்று வட்டார போக்குவரத்து அலுவலர் தெரிவித்துள்ளார்.

Tags

Next Story