நாகர்கோவில் அண்ணா ஸ்டேடியம் ரூ 1.28 கோடியில் புனரமைப்பு

நாகர்கோவில் அண்ணா ஸ்டேடியம் ரூ 1.28 கோடியில் புனரமைப்பு
X

அறிஞர் அண்ணா விளையாட்டு மைதானம்

நாகர்கோவில் அண்ணா ஸ்டேடியம் ரூ 1.28 கோடியில் புனரமைக்கப்பட்டு வருகிறது.

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் வடசேரியில் அண்ணா விளையாட்டு அரங்கம் உள்ளது. 1982ல் இந்த ஸ்டேடியம் கட்டப்பட்டது. தற்போது 50 ஆண்டுகள் கடந்துள்ளன.

இதில் நீச்சல் குளம், மாணவிகளுக்கான விளையாட்டு விடுதி உள்ளிட்டவைகளும் உள்ளன. அண்ணா விளையாட்டரங்கத்தில் பயிற்சி பெற்ற வீரர்கள் வீராங்கனைகள் மாநில, தேசிய மற்றும் சர்வதேச விளையாட்டு போட்டிகளில் சாதனை படைத்துள்ளனர். இந்த விளையாட்டரங்கத்தை புதுப்பிக்க வேண்டும், தரமான ஓடுதளம் அமைக்க வேண்டும், விளையாட்டு வீரர் வீராங்கனைகளுக்கு தேவையான உபகரணங்கள் வசதி செய்யப்பட வேண்டும், 50 ஆண்டுகள் ஆகிவிட்டதால் ஸ்டேடியத்தை புனரமைப்பு செய்ய வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது.

இதன் அடிப்படையில் தமிழக அரசு உத்தரவின் பேரில் திட்ட மதிப்பீடு தயாரிக்கப்பட்டு அதன் பெயரில் தற்போது சுமார் ரூ . 1.28 கோடியில் புனரமைக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதன் பணிகள் தற்போது தொடங்கி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

Tags

Next Story