ஒரத்துார் நீர்த்தேக்கத்தின் உடைந்த கரை சீரமைப்பு
தடுப்பு பணிகள்
காஞ்சிபுரம் மாவட்டம் படப்பை அருகே ஆரம்பாக்கம் மற்றும் ஒரத்துார் ஆகிய இரு ஏரிகளையும் இணைத்து, ஒரு டிஎம்சி தண்ணீர் சேமிக்கும் வகையில், புதிய நீர்த்தேக்கத்தை, நீர்வளத்துறையினர் உருவாக்கி வருகின்றனர். இதற்கான பணிகள், கடந்த 2019ல் துவங்கின. நீர்த்தேக்கம் அமைக்க, தமிழக அரசு 55 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்து, கரைகள், ஷட்டர்கள் அமைத்தன.
ஆனால், நீர்த்தேக்கத்தின் கரை பகுதியில் வரும் பட்டா நிலங்களுக்கு மாற்று இடம் வழங்கும் பணிகளை, வருவாய் துறையினர் மெத்தனமாக செய்வதால், நீர்த்தேக்கம் கட்டுமான பணிகள் இன்று வரை முழுமை பெறவில்லை. இதனால், நீர்த்தேக்க பணிகள், 70 சதவீதம் மட்டும் முடிந்துள்ளது. வரதராஜபுரம், முடிச்சூர், ஆதனுார் சுற்றிய பகுதிகளில் வெள்ள பாதிப்பு ஏற்படக் கூடாது என, இந்த நீர்த்தேக்கம் அமைக்கப்பட்டது. இ
ந்நிலையில், 'மிக்ஜாம்' புயல் ஏற்படுத்திய தாக்கத்தால், நீர்த்தேக்கத்தின் கரைகளில், இரு இடங்களில் உடைந்து, வீணாக தண்ணீர் வெளியேறியது. ஆயிரக்கணக்கான மணல் மூட்டைகள், சவுக்கு கட்டைகளையும், 50க்கும் மேற்பட்ட ஊழியர்களையும் கொண்டு, கரையை சீரமைக்கு பணியில் நீர்வளத்துறையினர் ஈடுபட்டுள்ளனர்.