சீரமைப்பு பணி: பில்லூர் குடிநீர் விநியோகம் நிறுத்தம்

சீரமைப்பு பணி: பில்லூர் குடிநீர் விநியோகம் நிறுத்தம்

சீரமைப்பு பணி


கோவை:பில்லூர் 1 மற்றும் பில்லூர் 2 திட்டங்களில் செயல்பட்டு வரும் வெள்ளியங்காடு நீரேற்று நிலையம் மற்றும் பில்லூர் அணை பகுதியில் உள்ள மின் தடங்களில் பலத்த காற்று மற்றும் மழை காரணமாக மரங்கள் சாய்ந்து விழுந்துள்ளதால் மூன்று மின்தடங்களில் பழுது ஏற்பட்டுள்ளது.

இதனை சீரமைக்கும் பணிகளை மின்வாரியத்தினர் மேற்கொண்டு வருகின்றனர்.இதன் காரணமாக மாநகராட்சி வடக்கு,கிழக்கு மற்றும் மத்திய மண்டலங்களுக்கு உட்பட்ட கணபதி,மணியகாரம்பாளையம், காந்திமா நகர்,பீளமேடு,ஆவாரம்பாளையம்,சிங்காநல்லூர், ஒண்டிப்புதூர், துடியலூர்,வெள்ளகிணறு, சின்னவேடம்பட்டி,சரவணம்பட்டி காளப்பட்டி,காந்திபுரம்,

சித்தாபுதூர்,ரேஸ் கோர்ஸ்,உக்கடம் அண்ணா நகர்,சாரமேடு அல்அமீன் காலனி,புலியகுளம்,ராமநாதபுரம் ஆகிய பகுதிகளுக்கு குடிநீர் வினியோகம் தடைபட்டுள்ளதாகவும் பணிகள் முடிவுற்று மின்விநியோகம் பெறப்பட்டவுடன் குடிநீர் வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என மாநகராட்சி ஆணையாளர் தெரிவித்துள்ளார்

Tags

Next Story