சேலத்தில் ரெப்கோ ஹோம் பைனான்ஸ் புதிய கிளை திறப்பு

சேலத்தில் ரெப்கோ ஹோம் பைனான்ஸ் புதிய கிளை திறப்பு

கிளை திறப்பு

சேலத்தில் ரெப்கோ ஹோம் பைனான்ஸ் புதிய கிளை திறக்கப்பட்டது.

ரெப்கோ வங்கியின் துணை நிறுவனமான ரெப்கோ ஹோம் பைனான்ஸ் நிறுவனத்தின் புதிய கிளை சேலம் கொண்டலாம்பட்டி ரவுண்டானா அருகே உள்ள சங்ககிரி சாலையில் தொடங்கப்பட்டுள்ளது.

இதன் திறப்பு விழாவுக்கு சேலம் மண்டல மேலாளர் சிஜூ, கோவை மற்றும் சேலம் மண்டலங்களின் வளர்ச்சி அதிகாரி முரளிதரன் ஆகியோர் தலைமை தாங்கினர். ரெப்கோ ஹோம் பைனான்ஸ் நிறுவனத்தின் தலைவரும், ரெப்கோ வங்கியின் இயக்குனருமான வக்கீல் தங்கராஜூ ரிப்பன் வெட்டி புதிய கிளையை திறந்து வைத்தார்.

தலைமை வளர்ச்சி அதிகாரி வைத்தியநாதன் குத்துவிளக்கேற்றினார். இதற்கான ஏற்பாடுகளை கொண்டலாம்பட்டி கிளை மேலாளர் அருள்குமார், சேலம் கிளை மேலாளர் சரவணன் ஆகியோர் செய்திருந்தனர்.

Tags

Next Story