சேலம் போக்குவரத்துக்கழக மண்டல தலைமை அலுவலகத்தில் குடியரசு தின விழா
குடியரசு தின கொண்டாட்டம்
சேலம் அரசு போக்குவரத்துக்கழக மண்டல தலைமை அலுவலகத்தில் குடியரசு தினம் கொண்டாடப்பட்டது.
சேலம் ராமகிருஷ்ணா ரோட்டில் உள்ள அரசு போக்குவரத்துக்கழக மண்டல தலைமை அலுவலகத்தில் குடியரசு தினவிழா நடந்தது. இதில், நிர்வாக இயக்குனர் பொன்முடி கலந்து கொண்டு தேசிய கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார்.
பின்னர் அவர் சிறப்பாக பணிபுரிந்த டிரைவர், கண்டக்டர், பணியாளர்கள் என மொத்தம் 122 பேருக்கு பரிசுகள் வழங்கி பாராட்டு தெரிவித்தார். மேலும், பணியாளர்களை ஊக்கப்படுத்தும் வகையில் நடைபெற்ற கவிதை, பேச்சு, பாட்டு, ஓவியம், கோலப்போட்டியில் வெற்றி பெற்ற பணியாளர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினருக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.
நிகழ்ச்சியில், மண்டல முதுநிலை துணை மேலாளர், பொது மேலாளர், துணை மேலாளர்கள், உதவி மேலாளர்கள், அனைத்துத்துறை பணியாளர்கள் கலந்து கொண்டனர்.
Next Story