ஜே.எஸ்.ராமாபுரம் சாலையில் மின்விளக்கு அமைக்க கோரிக்கை
மின்விளக்கு
ஜே.எஸ்.ராமாபுரம் சாலையில் மின்விளக்கு அமைக்க கோரிக்கை
திருவள்ளூர் திருவாலங்காடு ஒன்றியம், பெரியகளக்காட்டூர் ஊராட்சிக்கு உட்பட்டது ஜே.எஸ்.ராமாபுரம் கிராமம். இந்த கிராமங்களில் இருந்து, 300க்கும் மேற்பட்ட பெண்கள், மாணவ - மாணவியர் திருவள்ளூர், அரக்கோணம், திருத்தணி, சென்னை உள்ளிட்ட நகரங்களுக்கு கூலி வேலை, தனியார் கம்பெனிகளுக்கு வேலைக்கு சென்று, இரவு 10:00 மணிக்குள்ளாக வீடு திரும்புகின்றனர். இவர்கள் பெரும்பாலும் தக்கோலம் -- திருவாலங்காடு நெடுஞ்சாலையில் இருந்து, 2 கி.மீ., துாரத்தில் உள்ள தங்களது கிராமத்திற்கு நடந்து செல்கின்றனர். இந்த சாலையை ஒட்டி மின்கம்பத்தில் மின் விளக்கு பொருத்தப்படாமல் உள்ளது. இதனால் அந்த சாலை இருட்டாக காணப்படுவதால், பெண்கள் அந்த சாலை வழியாக செல்ல அச்சப்படுகின்றனர். எனவே இரவில் பெண்கள், குழந்தைகள் பாதுகாப்பாக செல்ல இந்த சாலையில் மின்கம்பம் பொருத்தி, மின் விளக்கு அமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பெண்கள் எதிர்பார்க்கின்றனர்.
Next Story