மயிலாடுதுறை-காரைக்குடி ரயில் மீண்டும் இயக்க கோரிக்கை
மயிலாடுதுறையிலிருந்து காரைக்குடி சென்ற ரயிலை மயிலாடுதுறையில் உள்ள பயணிகளும் பயன்படுத்துவதற்கு வசதியாக ஏற்கனவே இயக்கப்பட்ட நேரத்தில் வண்டியினை இயக்க வேண்டும் என திருச்சி ரயில்வே கேட்ட மேலாளர் சந்தித்து மனு அளித்தனர்.
இதுகுறித்து அதன் செயலாளர் சுந்தர் கூறுகையில் மயிலாடுதுறையில் இருந்து செல்லும் பயணிகள் நேரடியாக காரைக்குடி செல்வதற்கு வழிவகை செய்யுமாறு கேட்டுக் கொண்டுள்ளோம் பரிசீலனை செய்வதாக தெரிவித்துள்ளார்கள் மேலும் மயிலாடுதுறையில் இருந்து பழனி செல்வதற்கு வண்டியை இயக்க வலியுறுத்தியும் 06738 விழுப்புரத்தில் இருந்து வேளாங்கண்ணிக்கு காலை நேரத்தில்,
வண்டி இயக்க பரிந்துரை செய்ய வலியுறுத்தியும் மயிலாடுதுறை ஜங்ஷனில் இரண்டாவது மூன்றாவது நடைமேடைகளில் கோச் டிஸ்ப்ளே போர்டு உடனடியாக அமைக்க வேண்டும் என வலியுறுத்தியும் மயிலாடுதுறை ரயில் நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள புதிய பேட்டரி காரினை உடனடியாக இயக்க வலியுறுத்தியும்,
20684 தாம்பரம் செங்கோட்டை ரயிலை தினசரி ரயிலாக இயக்க வலியுறுத்தியும் 06690 ,06694 மயிலாடுதுறையில் இருந்து விழுப்புரம் செல்லும் ரயில்களை தாம்பரம் வரை நீட்டித்து தர வலியுறுத்தியும் மயிலாடுதுறையிலிருந்து கோயம்புத்தூருக்கு இரவு நேர எக்ஸ்பிரஸ் ரயில் இயக்கவும் 16234 திருச்சியில் இருந்து மதியம் 1:10க்கு புறப்படும் ரயிலை மதியம் 3 மணி அளவில் இயக்க வலியுறுத்தியும்,
அந்த வண்டிக்கு கூடுதல் பெட்டிகளை இணைக்க வலியுறுத்தியும் மயிலாடுதுறை ஜங்ஷன் நடைபெறும் கட்டிட பணிகள் மந்தமாக நடைபெறுவதை வலியுறுத்தி வேலைய துரிதப்படுத்துமாறு பேசப்பட்டது