நன்னியூர் புதூரில் பழுதடைந்த பூங்காவை சீரமைக்க கோரிக்கை

நன்னியூர் புதூரில் பழுதடைந்த பூங்காவை சீரமைக்க கோரிக்கை

பூங்காவை சீரமைக்க கோரிக்கை 

நன்னியூர் புதூரில் பழுதடைந்த பூங்காவை சீரமைக்க கோரிக்கை எழுந்துள்ளது.

நன்னியூர் புதூரில் பழுதடைந்த பூங்காவை சீரமைக்க கோரிக்கை. கரூர் மாவட்டம், கரூர் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட, நன்னியூர் புதூர் ஊராட்சியில், தொடக்கப்பள்ளி செயல்பட்டு வருகிறது.

தொடக்கப் பள்ளியில் பயிலும் மாணவ - மாணவிகளின் பயன்பாட்டிற்காகவும், அப்பகுதி பொதுமக்களின் பொழுதுபோக்குக்காகவும் சில வருடங்களுக்கு முன்பு அங்கு பூங்கா அமைக்கப்பட்டது.

இந்த பூங்காவில் மாணாக்கர்கள் விளையாடுவதற்கு வசதியாக பல்வேறு விளையாட்டு உபகரணங்கள் மற்றும் உடற்பயிற்சி செய்வதற்கான சாதனங்களும் இருந்து வந்தது. நாளடைவில், பூங்காவில் இருந்த விளையாட்டு உபகரணங்கள் உடைந்து சேதம் அடைந்துள்ளது. இது கிராம பகுதியாக இருப்பதால் வேறு பொழுதுபோக்குக்கான அம்சங்கள் மாணாக்கர்களுக்கும், பொது மக்களுக்கும் இல்லாததால் சிரமத்துக்கு ஆளாகியுள்ளனர்.

எனவே, பழுதான உபகரணங்களை சீரமைத்து தருமாறு அப்பகுதி மாணாக்கர்களும், பொதுமக்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags

Next Story