14வது வார்டு பகுதியில் கழிவு நீர் வடிகால் அமைக்க கோரிக்கை
தூத்துக்குடி 14வது வார்டு கழிவு நீர் வடிகால், சாலைப் பணிகளை விரைவில் துவங்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தூத்துக்குடி மாநகராட்சி 14 வது வார்டு செல்வ விநாயகர் தெருவில் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு தெருக்களில் உள்ள பள்ள மேடுகள் சீராக்க பட்டு வீடுகளின் படிகள் இடிக்கப்பட்டு, கழிவு நீர் உறைகிணறுகள் உடைக்கப்பட்டு சாலை அமைக்கும் பணி நடைபெற்றது. அதன் பின்னர் தற்பொழுது வரை வேறு எந்த பணியும் நடைபெறவில்லை அதனால் தெருக்களில் கழிவுநீர் தேங்கி பொதுமக்கள் தெருவில் பயணிக்க ரொம்ப சிரமப்படுகிறார்கள். எனவே, சாலைகள், மழைநீர் கால்வாய், கழிவுநீர் வடிகால் பணிகளை விரைவில் துவங்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Next Story