நாமக்கலில் 108 ஆம்புலன்ஸ் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப கோரிக்கை
கூட்டத்தில் கலந்து கொண்டவர்கள்
நாமக்கல்லில், தமிழ்நாடு 108 ஆம்புலன்ஸ் தொழிலாளர் சங்கம், கம்யூனிஸ்ட் ஒர்க்கர்ஸ் பார்ட்டி ஆஃப் இந்தியா ஆகியவை சார்பில் மே தின அரங்கக் கூட்டம் நடைபெற்றது. இதில், மாநில அமைப்பு செயலாளர் ம.பிரேம்குமார் தலைமை தாங்கினார்,108 ஆம்புலன்ஸ் தொழிலாளர் சங்க மாநில பொதுச்செயலாளர் ஆர்.ராஜேந்திரன், துணை பொதுச்செயலாளர் ஜெகதீசன்,
மாநில செயலாளர் சிவக்குமார், நாமக்கல் மாவட்ட தலைவர் கார்த்திகேயன், மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சுரேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.சிறப்பு அழைப்பாளராக கம்யூனிஸ்ட் ஒர்க்கர்ஸ் பார்ட்டி ஆஃப் இந்தியா தென்னிந்திய பொதுச்செயலாளர் அ.ஆனந்தன் பங்கேற்று பேசினார். தொழிலாளர் சட்டத் திருத்தத்தை கைவிட வேண்டும். ஒப்பந்த அடிப்படையிலான பணி நியமனம் கூடாது. பொது சுகாதாரம், 108 ஆம்புலன்ஸ் சேவை துறையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேண்டும். மக்களுக்கான மருத்துவ தேவையை தமிழக அரசு முறையாக நிவர்த்தி செய்ய வேண்டும். எட்டு மணி நேர வேலை என்பதை அனைத்துத் துறைகளிலும் அமல்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்தில் மாநில ஒருங்கிணைப்பாளர் நிம்ரோஜ், மாநில அமைப்பு செயலாளர் ஜெயப்பிரகாஷ் ஆகியோர் கருத்துரை ஆற்றினர். இதில் 108 ஆம்புலன்ஸ் ஓட்டுநர்கள், உதவியாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.