சோழவராயன் ஏரியை குடிமராமத்து பணி செய்ய கோரிக்கை
குப்பைகள் நிறைந்துள்ள ஏரி
தர்மபுரி மாவட்டத்தின் பெரிய ஏரிகளில் ஒன்றான சோழவராயன் ஏரி குடி மராமத்து பணிகள் செய்யக்கோரி விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளார்.
தர்மபுரி மாவட்டம் சோகத்தூரில் இருந்து பாலக்கோடு செல்லும் வழியில் அமைந்துள்ளது சோழவராயன் ஏரி, மாவட்டத்தில் பரப்பளவில் பெரிய ஏரிகளில் இந்த ஏரியும் ஒன்று கோடை காலம் ஆரம்பித்துள்ள நிலையில் ஏறி முழுவதும் வறண்டு காணப்படுகிறது மேலும் ஏரிகள் கருவேல மரங்கள் படர்ந்து வளர்ந்துள்ளது.
மேலும் சுற்றுப்புற பகுதியில் உள்ள மக்களின் கட்டிடக்கழிவுகள் பொதுமக்களின் அன்றாட குப்பை கழிவுகள் ஏரிகள் கொட்டப்பட்டு வருவதால் ஏரி களை இழந்து காணப்படுகிறது தற்போது கோடை காலம் என்பதால் கருவேலமரங்களை அகற்றி ஏறி தூர் வாரப்பட்டு மராமத்து பணிகள் செய்யப்பட்டால் மழைக்காலத்தில் விவசாயிகளுக்கு பயன்படும் வகையில் நீரை சேமிக்க முடியும் என விவசாயிகளும் சமூக ஆர்வலர்களும் மாவட்ட நிர்வாகத்திற்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
Next Story