கோவில் குளத்தை சீரமைக்க கோரிக்கை

கோவில் குளத்தை சீரமைக்க கோரிக்கை
கோவில் குளத்தை சீரமைக்க கோரிக்கை
கோவில் குளத்தை சீரமைக்க கோரிக்கை
செங்கல்பட்டு மாவட்டம், காட்டாங்கொளத்துார் ஒன்றியம், செட்டிப்புண்ணியம் ஊராட்சியில், 300க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இந்த கிராமத்தில்,பழமையான செங்கேணியம்மன் கோவில் அருகில் குளம் உள்ளது. இந்த குளம், பல ஆண்டுகளாக துார் வாரப்படாமல் சுற்றியுள்ள கருங்கற்களால் ஆன கரைகள் உடைந்து, குளத்தில் தண்ணீர் இல்லாமல் வறண்டு காணப்படுகிறது. மழைக்காலங்களில், அருகில் உள்ள ஏரியின் உபரி நீர் வரும் பாதைகள் முறையாக இல்லாததால், குளம் முழுமையாக நிரம்புவதில்லை. இதன் காரணமாக, நிலத்தடி நீரின் அளவு குறைந்து, தண்ணீரின் சுவையும் மாறுவதாக கிராம மக்கள் கூறுகின்றனர். எனவே, இந்த குளத்தை துார்வாரி கரைகளை புதுப்பிக்க வேண்டும் என, கிராமமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags

Next Story