மாற்று சான்றிதழ் வழங்க மறுக்கும் கல்லூரி மீது நடவடிக்கை எடுக்க கோரிக்கை
மாற்று சான்றிதழ்
கோவை: கேரள மாநிலம் திருச்சூர் பகுதியை சேர்ந்த நாராயணன் என்பவரின் மகன் சசீதரன் கோவில்பாளையம் பகுதியில் உள்ள தனியார் கல்லூரி(SNS)ல் பி.டெக் முதலாம் ஆண்டு பயின்று வருகிறார்.அதே கல்லூரியில் பயிலும் சக மாணவர்களான யாசின்,ஹபின்,ரிசில்,லிதின் ஆகியோர் தாக்குதல் நடத்தியதாக கோவில்பாளையம் காவல் நிலையத்தில் புகார் அளிக்கபட்டது.
இந்நிலையில் தாக்குதலுக்கு உள்ளான சசீதரன் தொடர்ந்து கல்லூரியில் பயில விருப்பம் இல்லை என பெற்றோரிடம் கூறியுள்ளார்.இதனையடுத்து கல்லூரி நிர்வாகத்திடம் மாற்று சான்றுதழ் வழங்குமாறு கேட்டதாகவும் மீதம் உள்ள மூன்று ஆண்டுகளுக்கான 1,27,000 ரூபாய் பணத்தை செலுத்தினால் மட்டுமே சான்றிதழ் வழங்க முடியும் என கல்லூரி நிர்வாக தெரிவித்ததாக கூறப்படுகிறது.
ஒரு மாதம் கடந்த நிலையில் நேற்று மாற்று சான்றிதழ் பெற சென்றபோது கல்லூரியின் முதல்வர் மற்றும் டீன் தனியாக அழைத்து சென்று வரும் கல்வி ஆண்டுகளுக்கான பணத்தை செலுத்தினால் மட்டுமே மாற்று சான்றிதழ் வழங்க முடியும் எனவும் இது தொடர்பாக போர்டு மீட்டிங் பின்னரே முடிவு செய்ய முடியும் எனவும் தாக்குதல் நடத்திய மாணவர்களின் பெற்றோருடன் விசாரணைக்கு பின் சான்றிதழ் வழங்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என கூறியுள்ளனர்.
தொடர்ந்து மன உளைச்சல் ஏற்படுத்துவதுடன் அதிகார தோரணையுடன் நடந்து கொள்ளும் கல்லூரி நிர்வாகம்,டீன் மற்றும் முதல்வர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்து பாதிக்கபட்ட மாணவன் சசிதரன் தன் தந்தையுடன் வந்திருந்து மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தார்.